Monday, September 16, 2013

பட்டி(நாய்) என்று பட்டியலிட்ட ஆர்.கே.செல்வமணியின் பேச்சு!!


இயக்குநர் களஞ்சியத்தின் “தமிழ்” எனும் குறும்படம் நேற்று(15-0-2013) ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி நிருபர்களை தரகுறைவாக விமர்சித்திருக்கிறார்.

விழாவில் செல்வமணி பேசியதாவது:
தமிழ் உணர்வு கொண்ட குறும்படம் என்பதால் எந்த பத்திரிக்கை நாய்களும் வரவில்லை இதுவே சினிமா நிகழ்ச்சி
என்றால் முன்வரிசையில் பத்து,பதினைந்து நாய்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும், இருபது, முப்பது நாய்கள் பின்வரிசையில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும். ஜம்பது,அறுபது நாய்கள் நடுவில் பேனா ஒன்றை வைத்துக்கொண்டு கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே மேடையில் மு.களஞ்சியம், மற்ற வி.ஐ.பிகளும் அமர்ந்து செல்வமணியின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தனர்.


Sunday, September 15, 2013

நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்-அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை

 தான் வளர்ந்து பெரியவளானதும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சரண்யா நாக் அஜீத் குமாரிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர் சரண்யா நாக். அதன் பிறகு சந்தியா சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். லேட்டானாலும் சரண்யா நாக் பொறுமையாக இருந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் தற்போது 4 படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தானாம். பெரிதாக லுக் இல்லாவிட்டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி சரண்யாவை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை
 நான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை சரண்யாவுக்கு அஜீத் குமாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம். சரண்யா அஜீத், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அப்போது அவAர் விளையாட்டுத் தனமாக அஜீத்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று கூறியுள்ளார்.

Saturday, September 14, 2013

செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு

  அஜீத் நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படத்தில் இன்னொரு ஜோடியாக ஆர்யா, டாப்ஸி நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு
 செப்டம்பர் 19-ம் தேதி ஆரம்பம் இசை வெளியீடு படத்தை தீபாவளிக்கு வெளியிடவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டனர். இந்த நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். முந்தைய அஜீத் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தது இல்லை. படத்தில் நடித்துக் கொடுப்பதோடு அஜீத்தும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார். அந்தப் பாணியிலேயே 'ஆரம்பம்' படப் பாடல்களையும் விழா எதுவும் நடத்தாமலேயே நேரடியாக ஆடியோ கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

Monday, September 9, 2013

அஜித்தை மிரள வைத்த சிவா

]
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.
இதனையடுத்து சிறுத்தை ‘சிவா’ இயக்கும் ‘வீரம்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட மும்முரமாக இயங்கி வருகிறார் அஜித்.
சமீபத்தில் ‘வீரம்’ படத்துக்காக ஆந்திராவில் ரெயிலில் வைத்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை படமாக்கியிருக்கிறார் சிவா.
இவர், இந்த சண்டைக்காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டும் போட்டுக் காண்பித்தாராம்.
அந்த காட்சிகளை பார்த்த அஜித் மிரண்டு போய்விட்டாராம். சிவாவை கட்டிப்பிடித்து எல்லோமே வித்தியாசமாக இருக்கு.
என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான் இயக்குனர் என சொன்னாராம். இதனால் சிவா ரொம்பவும் சந்தோஷத்தில் உள்ளார்.
‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும், விதார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி

Wednesday, May 8, 2013

யார் நல்லவர்?

 


துறவியும் உழவன்தான்!
துறவி ஒருவர் ஒரு சமயம் ஒரு விவசாயியிடம் பிச்சை கேட்டார்.

அதற்கு அவன், ``நான் உழுதுண்டு வாழ்கிறேன். நீயும் ஏன் உழைக்கக்கூடாது?'' என்று கேட்டான்.

உடனே துறவி, ``அப்பனே! நானும் ஒரு வகையில் உழவன்தான். தர்மம்என்னும் வயலில் மரியாதை என்னும் கலப்பையால் விடாமுயற்சியெனும் எருது துணை கொண்டு பக்தியெனும் உழவு செய்கிறேன். என் விவசாயத்தில் எனக்கு அமோக விளைச்சல். என்னை நாடிய எல்லோரையும் காப்பாற்றுகிறேன்'' என்றார்.



பதிலுக்கு பதில்
ஒருநாள் பெருந்துறவி ஒருவர் அரசனது மரியாதையை ஏற்று பல்லக்கில் அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரைக் கண்ட ஏழைக் குடியானவன் ஒருவன், துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு மரியாதை செலுத்தினான்.

துறவியும் பல்லக்கை விட்டு இறங்கி குடியானவனுக்கு பதில் மரியாதை செலுத்தினார். அப்போது அரசன் துறவியிடம், ``நீங்களோ பெருந்துறவி, தவசீலர். அந்த ஏழை பிரஜைக்கு பதில் மரியாதை செலுத்த வேண்டுமா?'' என்று கேட்டார்.

துறவி புன்னகையுடன், ``என்னை விடவும் பணிவும் மரியாதையும் தெரிந்த ஒருவர் இருப்பதை நான் விரும்புவதில்லை'' என்றார்.



நூறில் இரண்டாவது
தேறுமா?
துரியோதனனின் நூறு சகோதரர்களில் ஒருவர் கூடவா நல்லவரில்லை? இரண்டே இரண்டு நல்லவர்கள் உண்டு.

சூதாட்டத்தில் தருமன் தோற்ற பின்பு, தருமனின் மனைவி திரௌபதியைப் பணயம் வைக்குமாறு சகுனி கூறினான். தருமனும் சம்மதித்து மீண்டும் தோற்றான். சூதாட்டத்தில் `இதைப் பணயம் வை' என்று எதிராளி கூறக் கூடாது. சகுனி கூறி தருமன் வைத்ததால் திரௌபதி பணயப் பொருள் அல்ல. அது தர்மமும் அல்ல. இவ்வாறு கூறியவன் துரியோதனனின் தம்பி விகர்ணன்.

அதே சமயம் இச்செயலைக் கண்டு வெட்கி, தலைகுனிந்து நின்றவன் யுயுத்ஸு. போர்க்களத்தில் அபிமன்யு கொல்லப்பட்டவிதம் அதர்மம் என்று கூறி, போர்க்களத்திலிருந்தே வெளியேறியவனும் இதே யுயுத்ஸுதான். இவனும் துரியோதனனின் தம்பிதான்.

என்னதான் கெட்டவர்கள் என்றாலும் அக்கூட்டத்தில் இரண்டு பேராவது நல்லவர் இருப்பர்.



அரசனும் அடிமைதான்
அரசன் ஒருவன், ஒரு சமயம் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு துறவியை அழைத்து வரச் சொன்னான். அரசன் தன் செல்வச் செழிப்பை அவருக்குக் காட்ட விரும்பினான். ``துறவியே...! உமக்கு என்ன வேண்டுமோ, கேள்! தருகிறேன்'' என்றான். மன்னனின் மனதை அறிந்து கொண்டார் துறவி. ``மன்னா! நீரே, இரண்டு அடிமைகளுக்கு அடிமையாக இருக்கின்றாய்... அப்படி இருக்கும்போது என் தேவைகளை எப்படி நிறைவேற்றி வைப்பீர்?'' என்று கேட்டார் துறவி. ``இந்த நாட்டையே ஆளுகின்ற அரசன் நான். என்னிடம் எத்தனை அடிமைகள் இருக்கின்றார்கள் என்று தெரியுமா? அப்படி இருக்கும்போது, நான் எப்படி இரண்டு அடிமைக்கு அடிமையாக இருக்க முடியும்?'' என்று கோபத்துடன் கேட்டான். ``மன்னா! ஏன் கோபப்படுகிறீர்? எல்லா அரசர்களுமே எனக்குக் கட்டுப்பட்ட இரண்டு அடிமைகளுக்கும் அடிமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அந்த இரண்டு அடிமைகளின் பெயர், ஆசையும் கோபமும்தான். இப்போது சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் நீர் அடிமை இல்லையா?'' என்று அமைதியாக கேட்டார் துறவி. மன்னன் மௌனமானான்.



யார் நல்லவர்?
அந்த மடாதிபதி மக்களுக்கு அடிக்கடி அறிவுரை வழங்கினார். ஊர்மக்களும் அவரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். ஒரு சமயம் மடத்துக்கு வந்து அவரைச் சந்தித்த இளைஞன் ஒருவன், ``நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞன் இருக்கிறானே... அவன் திருடித்தான் வாழ்க்கை நடத்துகிறான். கொடிய பாவி!'' என்றான். அதற்கு அவர், ``அந்தஇளைஞன் அபாரமாக மிருதங்கம் வாசிப்பவன் ஆயிற்றே!'' என்றார். அப்பொழுது இன்னொரு இளைஞன் மடத்துக்குள் நுழைந்து மடாதிபதியை வணங்கி விட்டு, ``ஐயா! நம் ஊரில் மிருதங்கம் வாசிக்கும் இளைஞனை உங்களுக்குத் தெரியுமா? யாராக இருந்தாலும் அவன் வாசிப்பைக் கேட்டால் தங்களை மறந்து விடுவார்கள்'' என்று பாராட்டிப் பேசினான். அதற்கு பீடாதிபதி, ``அவன் ஒரு திருடன் அல்லவா?'' என்றார். மடாதிபதி இப்படிப் பேசியதைக் கேட்டு முதலில் வந்தவன் திகைத்தான். ``ஐயா! அந்த இளைஞனைத் திருடன், பாவி என்றேன் நான். அதற்கு நீங்கள் அவன் அபாரமாக வாசிக்கிறான் என்று பாராட்டினீர்கள். ஆனால் இவர் வந்து அந்த இைளஞனைப் பாராட்டியபோது, நீங்கள் அவனைத் திருடன் என்கிறீர்கள். ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு அந்த மடாதிபதி, ``ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று மதிப்பிட நாம் யார்? இந்த உலகில் யாரும்நல்லவனுமில்லை, கெட்டவனுமில்லை. அதனால்தான் அப்படிக் கூறினேன்!'' என்றார்.


குருவின் நன்றி!
ஒரு குருவிடம் பல சீடர்கள் பாடம் பயின்று வந்தனர். குருவிற்கு ஒரு பழக்கம் இருந்தது. பாடம் கேட்க சீடர்கள் வரும்போது வணக்கம் சொல்ல அனுமதிப்பார். ஆனால், பாடம் முடிந்து போகும்போது அவர்கள் வணக்கம், நன்றி சொல்ல அனுமதிக்க மாட்டார். மாறாக சீடர்களுக்கு அவர் நன்றி, வணக்கம் கூறி வந்தார். ஒரு நாள் சீடர்கள், ``இது சரியா? ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என எங்களுக்கு விளக்க வேண்டும்?'' என குருவிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அவர் சிரித்தபடியே, ``நீங்கள் என்னிடம் ஞானம் கேட்டு வரும்போது, எனக்கு வணக்கம் சொல்வது சரிதான்! ஆனால், இங்கிருந்து செல்லும்போது நான் நன்றி சொல்வதுதான் முறை. என் ஞானத்தை வெளிக்கொணர உதவுபவை உங்கள் கேள்விகளும், உங்கள் சந்தேகங்களும்தான். நீங்கள் கேள்வி கேட்காது விட்டால், என் ஞானம் என் உள்ளே அடங்கிவிடும். எனவே என் ஞானத்தை வெளிக்கொணர உதவியவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். கிணற்றுக்குள் தண்ணீர் இருந்தாலும் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. அதை வெளிக்கொண்டு வந்தால்தான் அனைவருக்கும் பிரயோஜனம்'' என்றார். சீடர்கள் மகிழ்ந்து போனார்கள்.

Tuesday, May 7, 2013

ஒழுங்கா படிச்சுட்டு கொஞ்சம் சிரிச்சுட்டு போயிடுங்க .....

 


கோபு: பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.

டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?

கோபு: நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!

***************************************

கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.

ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!

டிரைவர் :..............###???

***************************************


நண்பர் : இவங்க ஒரே நேரத்துல பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

கோபு: அப்படியா... அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"


***************************************

கோபு: என் பள்ளி வாழ்க்கையிலேயே ஒரே ஒரு முறை தான் ஃபெயில் ஆகியிருக்கேன்.

நண்பர்: பரவாயில்லயே..எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

கோபு: ஒண்ணாவது வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன் !
 
 
**************************
 
 
சிரிச்சா டும்டும் தான்

சுப்பு குரங்கு : அம்மா , எனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைப்பிங்க

அம்மா குரங்கு : சத்தம் போடாத, பொண்ணு  மெசேஸ் படிச்சுட்டு இருக்கு ,
 
அவ சிரிச்சா உனக்கு கல்யாணம்.
 

*********************
 
கோவிந்தா …….. கோவிந்தா …..


திருப்பதி மலைக்கு போய் சாமி கும்மிட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்

-------

-------


------

------

-----



பொறுமையா கீழ் இறங்க வேண்டும்

*************
 
பொது அறிவு

ஊர் இருக்கும் , ஆனா வீடு இருக்காது

கடல் இருக்கும் , ஆனா தண்ணிர் இருக்காது

அது என்ன

உலக வரைபடம்
 
***********
 
நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

*************

மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?

கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.

மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே

கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன?

***********************************
 
வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
 
*************
 
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?


ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

****************************************************************

நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு?

மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/-

நண்பர் 1: எப்போ கொறையும்?

மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது..........

************************************************************
 
நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....

************************************************************
 

எதுவும் சாத்தியமே!

 

( சிவகாசி சுப்புராஜ் )



இயற்கையில் இரவும் பகலும் எப்படியோ அப்படியே மனித வாழ்வில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். இரண்டையும் நேசிக்க பழகிக்கொள்வதே நல்ல அனுபவம் என்று கருதப்படுகிறது. வெற்றிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், தோல்விகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றால் அதனை மறுக்க இயலாது. நாம் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றுபோல் நினைக்க வேண்டும். அப்போதுதான், இரண்டுமே நம்மையே ஏமாற்றி அருகிலும் வரும், விலகியும் செல்லும். மோசமான தோல்விகளையைச் சந்திக்கும் துணிவு கொண்டவர்களால்தான் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாருடா எதிர் நீச்சல்’ என்ற பாடல் வரிகள், நாம் வெற்றி பெற வேண்டுமானால் தோல்வி என்னும் கடலில் எதிர் நீச்சல் போட வேண்டும் என தெள்ளத் தெளிவாகவும் நாசூக்காகவும் எடுத்துரைக்கின்றது.

வெற்றி என்னும் மூன்றெழுத்தை விரும்பாதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றி என்னும் வைரம் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதில்லை. இது நமது மனப்பாங்கின் விளைவே ஆகும். நமது மனப்பாங்கே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒன்றாகும். வெற்றி என்பதே குறிக்கோளை அடைவதே என பொருள்படும். குறிக்கோள் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக வெற்றி என்பதே கிடையாது. குறிக்கோள் இல்லாதவரின் வாழ்க்கை, நடுக்காட்டில் வழி தெரியாமல் தவிக்கும் குருடரின் வாழ்க்கையைப் போன்றது என்கிறார்கள். பேருந்தில் பயணம் செய்யும்போது எந்தப் பேருந்து? எங்கே செல்கிறது? பேருந்தில் ஏறினால் நாம் போய் சேரக்கூடிய இடத்தை அடைய முடியும் என்று எண்ணிதான் செயல்படுகின்றோம். இதிலும் முக்கியமான ஒன்று, எந்த இடத்திற்குப் போகப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லையென்றால் நாம் அந்த இடத்திற்குப் போய் சேர முடியாது. அதே போலத்தான் நாம் எந்த ஒரு முயற்சியில் ஈடுப்பட்டாலும், ஒரு குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்.


வெற்றி என்பது வாழ்வில் நாம் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதைக் கொண்டு அளக்கப்படுவதில்லை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் விழும் போது எத்தனை முறை மீண்டும் உடனே எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைக் கொண்டே அளக்கப்படுவதுதான் வெற்றியாகும். மீண்டும் மீண்டும் எழும் இந்தத் திறமையே வெற்றியைத் தீர்மானிக்கின்றது. ‘வீழ்வதே மீண்டும் எழுவதற்குத்தானே’ என்ற அற்புதமான வரிகள் நம் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும். இங்கு, விழுவது என்பது தோல்வி என்றும் எழுவது என்பது வெற்றி என்றும் பொருள்படுகின்றது. இதனை உணர்ந்தே, ‘ஒரு மனிதனின் வெற்றி, அவனது தோல்விகளில்தான் நிர்ணயிக்கப்படுகின்றதாம். ஏனெனில், அவன் கீழே விழுகிற ஒவ்வொரு முறையும், வேகமாய் முன்னேறுகிறான்’ என்று அழுத்தத் திருத்தமாய்ச் சொல்கிறார் ரால்ஃப் வால்டோ எமர்சன் என்கிற ஓர் அறிஞர். விழும் ஒவ்வொரு முறையும் எழுவதில்தான் நம் சிறப்பு வெளிப்படுமே தவிர, விழுவதில் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தோல்வி என்பது கடுமையானதுதான். ஆனால், வெற்றி பெறுவதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதுதான் அதைவிட மோசமானதாகக் கருதப்படுகிறது.


நெஞ்சிலே துணிவில்லாதவனுக்குத், தோல்விகளெல்லாம் தடைக்கற்கள். துணிவுள்ளவனுக்கோ, தடைக்கற்கள்கூட அவனைத் தூக்கி நிறுத்துகின்ற படிக்கற்கள்தான் என கூறினால் அது மிகையாகாது. தோல்வி என்பது நம்மோடு நிரந்தர வாசம் புரிய வருகிற ஒன்றல்ல. அது சில சமயங்களில், சில சந்தர்ப்பங்களில், சில இடங்களில் நம்மைத் தொட்டு விடுகிறது. அதனால்தான், இக்கூற்றினை வெற்றிகளை வரவில் வைத்துக் கொள்வதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள், நம்மை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன என்பதுதான் அதன் பொருள் எனப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் முழுமைப் பெற்றவனாக, வெற்றி அடைந்தவனாக, எந்தவொரு மனிதனையும் நாம் இனம் காட்டுதல் இயலாது. ஒன்றில் கொடி கட்டிப் பறக்கிறவன், இன்னொன்றில் குப்புற விழுந்து மண்ணைக் கவ்வுகின்றான். ஆக, இப்படி வெற்றியும் தோல்வியும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் வந்து போகிற சாதாரண சங்கதிகளே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றையே எண்ணி எண்ணி மனச்சோர்வு காணக்கூடாது. எனவே, இனியாவது புரிந்து கொள்ளுங்கள் வெற்றியின் திரைமறைவில் தோல்விகளும் நம்மைத் தொடரலாம்! தோல்விகளைப் படிக்கற்கற்களாக்கிக் கொண்டால் வெற்றியின் விளிம்பையும் நாம் எட்டிவிடலாம். இதனால்தான், தோல்வியே வெற்றியின் முதற்படி என்ற பழமொழியைக் கூறுகின்றனர். இப்பழமொழி பொய்யல்ல, ஒவ்வொருவரும் உணர வேண்டிய உண்மை என்றால் அது மிகையாகாது. வெற்றி பெற்றவர்கள் அப்படியிலே அமர்ந்து விடுவார்கள். ஆனால், தோல்வி அடைந்தவர்கள்தான் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பார்கள்.


எந்தத் தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கதவு மூடினால், அடுத்த கதவைத் திறக்க முயல வேண்டும். தோல்வி என்பது வாழ்வின் ஓர் அங்கம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து பல அனுபவ பாடங்களைப் படிக்க முடியும் என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். தோல்வியின் சுவையினை நாம் அனுபவித்து அறிந்திருந்தால் ‘இனியொருமுறை தோற்கக்கூடாது’ என்கிற மனப்பக்குவம் நமக்குள் வந்து விடும். தோல்வியே வெற்றிக்கான நெடும் பாதையாகும். டாம் வாட்சன் சீனியர் என்பவர், “நீங்கள் வெற்றி பெற விரும்பினால், உங்களுடைய தோல்வியின் சதவீதத்தை இரண்டு மடங்கு ஆக்குங்கள்” என்று கூறியிருக்கின்றார். அவரின் கூற்றானது முற்றிலும் உண்மையே என்று கூறினால், அதுவே உண்மையாகும்.


தோல்வியின்றி வராலாறு படைக்க இயலுமா? நாம் வரலாற்றைப் படிக்கையில், எல்லா வெற்றிக் கதைகளுமே பெரிய தோல்விகளின் கதைகள் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்வோம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர்கள் தோல்வி அடையும் போதும், அவர்கள் மீண்டும் எழுகின்றார்கள். இதைப் பின்னடைவு தரும் தோல்வி என்று சொல்வதை விட முன்னேற்றம் தரும் தோல்வி என்று சொல்லலாம். ஆனால், பலரும் வெற்றியின் தாரக மந்திரம் தோல்விதான் என்பதை உணர்வதும் இல்லை, ஏற்றுக் கொள்வதும் இல்லை. மானிடர்களின் இந்த அறியாமை நீங்கும் காலம் எப்போது வருமோ என்று வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். வெற்றி என்பது நாம் சாதிக்கும் விஷயங்களில் இல்லை; சாதிப்பதிலேயே இருக்கின்றது.

தோல்விக்குப் பயந்து சிலர் எப்போதும் முயற்சி செய்வதே இல்லை. அதே சமயம், அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கவும் விரும்பமாட்டார்கள். சாதிக்க விரும்பும் மனிதன் தோல்விகளைப் பற்றியோ எதிர்ப்புகளைப் பற்றியோ, எதிரிகளைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ஒரே இடத்தில் நின்று காலத்தை வீணாக்கமாட்டான். எப்படி இதை எதிர்கொள்வது என்று செயல்பட ஏற்ற வழி எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து முடிக்க நடை போட ஆரம்பித்து விடுவார்கள். ‘தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாசல்களும் திறந்து வரவேற்பு கொடுக்கும்!’ என்கிறார் எமர்சன்.


நாம் சரியான மனப்பாங்கு உள்ளவராக இருந்தால், தோல்வியை ஓர் ஆசிரியராகத்தான் கருதுவோம். ஆசிரியர் என்பவர், நாம் ஒன்றைப் பற்றி தெள்ளத் தெளிவாகவும், ஆழமாகவும் கற்றுக் கொள்வதற்கு எவ்வாறு துணைபுரிகிறாரோ, அவ்வாறே இந்தத் தோல்வியும் வெற்றி என்னும் சிகரத்தை அடைவதற்கான நேர் பாதையை நன்றாக தெரிந்து கொள்ளத் துணை புரிகின்றது. தோல்வி அடையும் போது நாம் ஏமாற்றமடையலாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே இருந்து விட்டால், முற்றிலும் அழிந்துபோக நேரிடலாம். எனவேதான், தோல்வியிலிருந்து ஆதாயமடைவதே வெற்றியின் திறவுகோல் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு தோல்வியும் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஒரு பாடநூல், ஒரு ஆய்வுக்கூடம், ஒரு அனுபவம் என பலவாறு கூறுகின்றனர். அதனால்தான், தோல்வியை ஆசிரியருக்கு ஒப்பிட்டுள்ளேன். தோல்வி என்பது ஒரு சுற்றுப் பாதையே தவிர அதுவே முடிவாகாது. இது ஒரு தாமதமே தவிர பேரிடியில்லை என்பதை முதலில் நாம் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டும். அப்போதுதான், தோல்வியைக் கண்டு பயப்படாமல் அதனை துச்சமாக எண்ணி வெற்றியின் இலக்கை நோக்கிப் பீடுநடைப் போடுவோம்.நாம் பெற்ற அனுபவத்திலிருந்துதான் ஒன்றைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். எனவே, நாம் செய்த தவறுகளுக்கு அனுபவம் என்ற பெயர் பொருந்தும் என்றால் அது மிகையாகாது.

வெற்றி பெற வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள், அப்படி விரும்பினால் மட்டும் போதுமா..? எதிர்படும் தோல்வியைப் புறமுதுகு காட்டாமல் எதிர்கொள்ள வேண்டும். ‘தோல்வியைக் கண்டு பயந்துவிடாதே’, என்ற பாடல் வரியை நாம் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருந்தால், தோல்வி எனும் மூன்றெழுத்தின் பயம் சூரியனைக் கண்ட பனிப்போல மறைந்துவிடும். தோல்வி பற்றிய பயம் பல சமயம் தோல்வியை விட மோசமாக இருக்கலாம். ஆனால், நாம் அதனைக் கண்டு ஒரு போதும் துவண்டு விடக்கூடாது. தோல்வியைக் கண்டு துவண்டு போவதால் ஒரு பயனுமில்லை. அதை நேருக்கு நேர் எதிர்கொண்டு, எந்தத் தோல்வியும் என்னை தடுத்துவிட முடியாது என்றும் அதை நான் அனுமதித்தால் மட்டுமே என்னை அது முடக்க முடியும் என்று உறுதி கொள்வபர்களே வெற்றியாளர்கள். தோல்விகள் கொடுத்த பாடங்களிலிருந்து புதிய வெற்றிக்கான அடித்தளம் அமைக்க வேண்டும். தோல்வி என்பது நம் வாழ்வில் நடக்கும் ஒரு பயங்கர நிகழ்ச்சியில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகள் நம்மைத் துன்புறுத்தும் போது அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க நாம் முன்பு அடைந்த சிறு சிறு வெற்றிகளை நினைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

“ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்,
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்,
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு,
ஒவ்வொரு காணமல் போதலும் ஒரு தேடல்”,

என்று தோல்வியை வெற்றியாக மாற்றும் மந்திரத்தைச் சொல்கிறார் நம் வெ.இறையன்பு.


முயற்சியில் வெல்ல வேண்டும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் விரும்பினால் ‘இயலும்’ என எண்ணித் துணிந்தால் தான் உண்டு. இல்லையேல் தோல்வியும் துயரமும்தான் நம் முயற்சிகள் அனைத்தையும் பின் தொடர்ந்து கொண்டு இருக்கும். இயலாது என்பது முட்டாள்களின் வாதம். எனவே என்னால் இது இயலாது, எனக்கு அது தெரியாது, இது தெரியாது என்று சொல்லாதே ‘முயற்சி செய்து பழகிக்கொள்’ என்கிறார் நம் புரட்சிக்கவி பாரதியார். எனவேதான், ‘வெற்றியில் ஆசை வை’ என்கிறார் அறிஞர் அப்துல் ரஹீம். என்னால் இயலாது என எண்ணிக் கொண்டிருப்பவன் ஒருமுறை தோல்வியுற்ற பின், ‘இயலாது’ எனும் பயனற்ற மந்திரத்தைத் தன் மனதில் பதித்துக் கொண்டு மீண்டும் முயல முற்படமாட்டான். அம்மந்திரத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, வெற்றி கிட்டும் வரை நாம் கண்டிப்பாக முயல வேண்டும் என்று மன உறுதியுடன் போராட வேண்டும்.

நமக்குள் இருக்கும் தோல்வி மனப்பான்மையை எடுத்து வெளியே வீசிவிட்டு அந்த இடத்தில் வெற்றி மனப்பான்மையை நிரப்ப வேண்டும். சிறு குழந்தையைப் பார்த்தோமானால், அது நடைப்பழகக் கற்றுக்கொள்ளும் போது, விழுந்து கொண்டே இருக்கும். ஆனால், அக்குழந்தைக்கு அது தோல்வியல்ல. ஆகையால், விழுந்ததும் மீண்டும் எழுந்து கொள்கின்றது. பல முறை விழுந்திருந்தாலும் நன்றாக நடக்க கற்றுக்கொண்ட பின் அதன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குழந்தை மட்டும் மனச்சோர்வு அடைந்து முயற்சியைக் கைவிட்டு விட்டால், அதனால் ஒரு போதும் நடக்க இயலாது. பயத்துடன் மண்டியிட்டு வாழ்வதைவிட, துணிவுடன் நின்று கொண்டு சாவதே மேல். கீழே விழுந்து விட்டீர்களா.. பரவாயில்லை. அதற்காக வருத்தமோ வெட்கமோ கொள்ளாதீர்கள். அடுத்து அடியெடுத்து வைக்க அந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நீங்கள், தோல்வி என்னும் தூசியை தட்டி விட்டு புறப்படுங்கள். சிறு குழந்தையே பல முறை விழுந்து மீண்டும் எழுந்து நடக்கும் போது நம்மால் முடியாத என்ன? நீங்கள் மேற்கொள்ளும் வேலையில், தொழிலில் தோல்வி ஏற்பட்டால் அதைவிட்டு நகர்ந்து விடாதீர்கள். எப்போதும் தோல்வி என்பது மீண்டும் ஒரு முயற்சியை இன்னும் திறமையுடன் தொடங்குவதற்கு வழங்கப்படும் வாய்ப்பாகும். எனவே, தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டு அதைத் திருத்திக் கொண்டு அடுத்த முயற்சி செய்ய என்றுமே கற்றுக் கொள்ள வேண்டும். “நான் சிறுவனாக இருந்தபோது, நான் செய்த பத்து முயற்சிகளில் ஒன்பது முயற்சிகள் தோல்வியில் முடியும். நான் அந்த தோல்வியைத் தவிர்ப்பதற்காக என்னுடைய உழைப்பைப் பெருக்கி, என் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கைப்பற்றி வந்தேன்” என்கிறார் நாடக மேதை பெர்னாட்ஷா. இவரின் கூற்றை நாம் சற்று உற்று நோக்கினாலே நமக்கு தோல்வியிலிருந்துதான் பல அரிய கருத்துகளைக் கற்றுக்கொண்டு முயற்சி அடைய முடியும் என்ற உண்மை நன்குப் புலப்படும்.

தோல்வி இன்றி வரலாறா? தாமஸ் ஆல்வா எடிசனை விடவா நீ தோற்கப் போகிறாய்? நெப்போலியன் மூன்றில் இரண்டு பங்கு போரில் தோற்றவர்தான். பதினாறு முறை வாழ்க்கையில் தோல்வி கண்டவர்தான் ஆபிரகாம் லிங்கன். பதினேழு முறை தோற்று வெற்றி கண்டவர்தான் கஜினி முகமது. பலமுறை முயன்று தோல்வியுற்றுதான் அச்சிறு உருவத்தைக் கொண்ட சிலந்தியே வலை பின்னுகிறது. நான் இதுவரை குறிப்பிட்டவர்கள் கூட தோல்வியைக் கண்டு, சற்று சோர்வுற்றிருக்கலாம். ஆனால், சிலந்தி தோல்வியைக் கண்டு சோர்வுற்று தன் முயற்சியிலிருந்து பின் வாங்கியதாக சரித்திரம் ஏதும் இல்லை. தோல்விகளைப் பெரிய மலைகளாக எண்ணாமல், அதனை மண் மேடுகளாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தோல்வியின் சுமை நம்மை அழுத்தாது. தோல்வியை ஏற்றுக்கொண்டு முயன்றால் வெற்றி நிச்சயம், அதுவே வேத சத்தியம். “முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. வெற்றிக்கு முன்னர் ஓய்வென்பதில்லை” என்று செயல்படு. வெற்றி மாலை உனதாகும்.

இறுதியாக, ‘தோல்வியே வெற்றியின் முதற்படி’ எனும் பழமொழியின் விளக்கத்தை நாம் நன்குப் புரிந்து கொண்டு தோல்வியை மனதார ஏற்றுக் கொண்டு, வெற்றியை நோக்கிப் பீடுநடை போடக் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் படைப்பில் இன்றியமையாத நாம் நினைத்தால் எதுவும் சாத்தியமே!